கடந்த ஆண்டு ஜனவரி மாதமே, இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்த போதிலும்,
கடந்த ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி வழக்கம் போல, இராணுவ
அணிவகுப்புகளுடனேயே போர் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
இப்போது, போர் வீரர்கள் நாள் என்று அது பெயர் மாற்றம் பெற்ற போதிலும், போரில்
இறந்த படையினரை நினைவு கூரும் நாள் என்பதற்கு அப்பால், போரில் வெற்றியீட்டிய
நாளாகவே அது சிங்கள மக்கள் மத்தியில் நிலைத்திருக்கிறது.
முன்னைய அரசாங்கம், போர் முடிவுக்கு வந்த பின்னர், கொண்டாடத் தொடங்கிய வெற்றி
விழாவுக்கு இந்த ஆண்டுதான், அரசாங்கம் முடிவு கட்டியிருக்கிறது. கடந்த ஆண்டிலும்,
நடத்தப்பட்ட இந்தக் கொண்டாட்டங்கள், இந்த ஆண்டு தான், நிறுத்தப்பட்டிருக்கின்றன.
மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இறுதிக்கட்டப் போரில்
கொல்லப்பட்ட மக்களுக்கு கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்துவதற்கு
அனுமதி அளிக்கப்பட்டது. அதேநேரத்தில் கொழும்பில், போர் வெற்றி விழாக்
கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
வடக்கிலுள்ள மக்கள், கொல்லப்பட்ட உறவுகளுக்காக கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த
போது, தெற்கில் போர் வெற்றிப் பேரிகைகள் முழங்கின.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கால அணுகுமுறைகளும், நடைமுறைகளும், விலகவில்லை
என்பதை, இந்த இரண்டு நிகழ்வுகளும் அப்போது எடுத்துக் காட்டியிருந்தன.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று சில மாதங்களே ஆகியிருந்த அந்தச்
சூழலில் அவர் மீது பெரியளவிலான எதிர்பார்ப்பு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்
ஏற்பட்டிருந்தது.
ஆனால், தெற்கில் கொண்டாடப்பட்ட போர் வெற்றி அரசாங்கத்தின் மீது அதிருப்தியை
ஏற்படுத்தியது. இதுபற்றி கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இதன் விளைவு, இந்த ஆண்டு போர் வெற்றி விழா கொண்டாடப்படவில்லை. இராணுவ
அணிவகுப்புகள் நடக்கவில்லை. போரில் இறந்த படையினருக்கு மரியாதை செலுத்தும்
நாளாக மட்டும், கடைப்பிடிக்கப்படுகிறது.
போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டமை, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில்,
சற்று ஆறுதல் அளிக்கின்ற விடயமாக இருந்தாலும், கடும்போக்கு சிங்களத் தலைமைகள்
மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதில்
சந்தேகமில்லை.
மேற்குலகின் அழுத்தங்களினால் தான், போர் வெற்றிக் கொண்டாட்டங்களை அரசாங்கம்
நிறுத்தியுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கூறியிருக்கிறார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் கூட, போர் வெற்றிக் கொண்டாட்டங்களை நிறுத்துமாறு,
தமக்கு மேற்குலக நாடுகளால் அடுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.
அதேவேளை, மகிந்த ராஜபக்சவின் தலைமையில் குருநாகலவில் போர் வெற்றிக்
கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
சிங்கள மக்கள் போர் வெற்றியைக் கொண்டாடுவதற்கு விரும்புகின்றனரோ இல்லையோ-
சிங்கள அரசியல் தலைமைகள் அதனை விரும்புகின்றன என்பதே உண்மை.
இம்முறை, போர் வெற்றி விழாவில், இராணுவ அணிவகுப்பு இடம்பெறாது என்று முதலில்
அறிவித்திருந்தார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன.
இராணுவ அணிவகுப்புகளுக்கு அதிகளவு செலவு ஏற்படும் என்றும், அதற்காக
செலவிடப்படும் வீண் தொகையை படையினரின் குடும்பங்களின் நலன்களுக்காக
பயன்படுத்தப்படும் என்றே அவர் காரணம் கூறியிருந்தார்.
ஆனால், அதற்குப் பின்னர், செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்த பாதுகாப்பு
அமைச்சின் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, போர் வெற்றி விழா
நிறுத்தப்பட்டமைக்கு இன்னொரு காரணத்தைக் கூறியிருந்தார்.
“இரு நாடுகளுக்கு இடையிலான போராக இருந்தால் நாம் வெற்றிபெற்றதை கொண்டாட
முடியும். ஆனால் இது ஒரு நாட்டினுள் -சகோதர இனங்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்.
இதில் எமது சகோதர உறவுகள் தான் கொல்லப்பட்டனர்.
விடுதலைப்புலிகள் ஆயுத இயக்கமாக இருந்தாலும் கூட அவர்களும் இலங்கையர்கள் தான்.
அவர்களும் ஏதோ ஒரு உரிமைக்கான போராட்டமாகவே இதை முன்னெடுத்தனர்.
இன்று விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுள்ளது. எமது சகோதரர்களை கொன்றுவிட்டு
நாம் வெற்றிவிழா கொண்டாட தயாராக இல்லை.” என்று அவர் கூறியிருந்தார்.
அரசாங்கத்தில் உள்ள அரசியல்வாதிகள் வெளிப்படுத்தத் தயங்கிய விடயத்தை பாதுகாப்புச்
செயலர் ஒரு அதிகாரியாக இருந்து வெளிப்படுத்தியிருந்தார். இந்தக் கருத்து, கூட்டு
எதிரணியினரைக் கடுமையாக எரிச்சலடையச் செய்திருக்கிறது.
விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்டது தனிநாட்டுக்கான போராகவே இருந்தாலும்,
நாட்டை ஒன்றுபடுத்துவதற்கென்றே அரசாங்கம் போரை நடத்தியிருந்தது.
நாட்டை ஒன்றுபடுத்துவதற்காக போரை நடத்தி அதில் வெற்றியையும் பெற்ற
அரசாங்கத்தினால், அந்த இலக்கை எட்ட முடியவில்லை. அதற்குப் பிரதான காரணம்,
அழிவுகளை எதிர்கொண்ட தமிழ் இனத்தை அரசாங்கம் அரவணைக்கத் தவறியிருந்தது.
இப்போதைய அரசாங்கம், அந்த தவறுகளைக் களைவதற்கு முனைகிறது.