சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் முன்னாள் இணைப்புச் செயலாளரான சம்பிக்க கருணாரத்ன, 1.1 கிலோ தங்கத்துடன், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரலஸ்கமுவவில் உள்ள வீடு ஒன்றில் வைத்தே இவர் நேற்று கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் நாமல் ராஜபக்சவின் இணைப்புச் செயலாளராகவும் பணியாற்றியதாக கூறப்படுகிறது.
மகிந்த ராஜபக்ச சிறிலங்கா அதிபராக இருந்த போது, அவரது இணைப்புச் செயலாளராக இருந்து கொண்டே, அரசுத்துறை நிறுவனங்களான, துறைமுக அதிகாரசபை மற்றும், தேசிய லொத்தர் சபை ஆகியவற்றிலும் பதவிகளை வகித்து, அரச சொத்துக்களை மோசடி செய்த குற்றச்சாட்டில், சம்பிக்க கருணாரத்ன, ஏற்கனவே கடந்த நொவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.