Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » யாழில் கழிவறைகள் இல்லாத கல்விநிலையங்களாக கல்லறைகள்

யாழில் கழிவறைகள் இல்லாத கல்விநிலையங்களாக கல்லறைகள்

வல்வெட்டித்துறை வங்கிக்கு அருகாமையில் உள்ள மொடேன் கல்வி நிலையம். எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் பல வருடங்களாக இயங்கி வருகிறது. யாழ்குடா நாட்டில் இவ்வாறு பல நூறு கழிவறைகள் இல்லாத கல்வி நிலையங்களாக கல்லறைகள் இருந்து வருகின்றது. கடைக்கு என கட்டப்பட்ட கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெறுகின்றது.

காற்றோட்டம் இல்லாமல் அதிக வெப்பத்தை தாங்கி கொண்டு மாணவர்கள் கல்வி கற்க வேண்டி உள்ளது. 1000 வரையில் தரம் 6 மாணவர்களிடம் கூட சம்பள காசு வாங்கப் படுகிறது.

moden1

 

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளரான நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய வல்வெட்டித்துறை நகரசபை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காரணம் வல்வெட்டித்துறை நகர சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளூகைக்குள் 2015 வரை இருந்துள்ளது.

குறித்த மொடேன் தனியார் கல்வி நிலையம் கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.

moden3

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகரும் பொறுப்பற்ற வகையில் நடந்து வருகின்றார்.

இவ் மோடேன் தனியார் கல்வி நிலைய நிர்வாகி பெயர் கு.தவக்குமார். 0777079536.

அடிப்படை வசதிகள் இல்லாத தனியார் கல்வி நிலையங்களை சீர்செய்ய அல்லது வழக்கு தொடர அல்லது மூடுவதற்கு உரிய அதிகாரம் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கும் உள்ளது.

modern

யாழ் குடா நாட்டில் கழிவறை என்பது பெண்களின் உரிமை!

யாழ் குடா நாட்டில் கழிவறைகள் கழிவறையின் முக்கியத்துவம் இன்னும் பெரும்பாலான கல்வி நிலையம்களில் உணரப்படவில்லை. யாழ் குடா நாட்டில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகரும் பொறுப்பற்ற வகையில்அதை உணர்த்தவும் முன்வரவில்லை.

யாழ் குடா நாட்டில் அன்றாடம்  அழுத்துகிற பிரச்னைகளுக்கு மத்தியில் கழிவறையைப் பற்றி யோசிக்கவும் யாழ் குடா நாட்டில் தனியார் கல்வி நிலையங்களில் பராயமடைந்த மாணவிகள் நிலை மிகவும் வேதனைகரமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *