வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு, 30 படுக்கைகளைக் கொண்ட நவீன கள மருத்துவமனையையும், நிவாரணப் பொருட்களையும், பாகிஸ்தான் அனுப்பவுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவியை வழங்குவதற்கு, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தமது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் வழங்கவுள்ள நிவாரண உதவியில், சத்திரசிகிச்சைக் கூடம், எக்ஸ்ரே வசதிகள், மற்றும் ஆய்வுகூடம் என்பனவற்றை உள்ளடக்கிய 30 படுக்கைகளைக் கொண்ட நவீன கள மருத்துவமனை, மற்றும் மருந்துப் பொருட்கள், மின்பாக்கிகள், தார்ப்பாய்கள், கூடாரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்களும் உள்ளடங்கியுள்ளன.
மருத்துவ உதவியை வழங்குவதற்காக, 17 பாகிஸ்தானிய மருத்துவர்களும், சிறிலங்கா வரவுள்ளனர்