யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்துக்கு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வளாகம் ஒன்றை அமைப்பதற்கு, 2.2 பில்லியன் ரூபாவை உதவியாக வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது.
வடக்கில் உலர் வலய விவசாயம் தொடர்பான காத்திரமான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காகவே இந்த உதவி வழங்கப்படவுள்ளது.
இந்த உதவியின் கீழ், யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தில், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வளாகம் ஒன்று அமைக்கப்படும். ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான பண்ணை மற்றும் அதற்குத் தேவையான கருவிகளும் வழங்கப்படும்.
இதுதொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு, ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகநுமாவுக்கும், நிதி திட்டமிடல் அமைச்சின் செயலர் சமரதுங்கவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.