சிறிலங்காவில் கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹுபிட்டியவில் ஏற்பட்ட நிலச்சரிவில், சிக்கி 16 பேர் காணாமற் போயுள்ளனர்.
புலத்கொஹுபிட்டிய, என்ற கிராமத்தைச் சேர்ந்த 16 பேர் காணாமற்போயுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று காலை அறிவித்துள்ளது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு உதவி மற்றும் மீட்புக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனினும், மோசமான காலநிலையால், மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில், ஆறு நிரைகளாக இருந்த வீடுகள் சேதமடைந்தன. அவற்றில் பல முற்றாகவே புதையுண்டு போனதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.