இத்தாலியின் பிரதி வெளிவிவகார அமைச்சர், பெனெடேரோ டீலா வெடோவா, நேற்று சிறிலங்காவுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
2006ஆம் ஆண்டுக்கு இத்தாலிய வெளிவிவகார அமைச்சர், மேற்கொண்ட பயணத்துக்குப் பின்னர், அந்த நாட்டின் உயர் மட்ட அரச பிரமுகர் ஒருவர் சிறிலங்கா வருவது இதுவே முதல்முறையாகும்.
நேற்று சிறிலங்கா வந்த இத்தாலிய பிரதி வெளிவிவகார அமைச்சர், நாளை வரை கொழும்பில் தங்கியிருப்பார்.
இதன்போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மற்றும் அமைச்சர்களையும் சந்தித்துப் பேச அவர் திட்டமிட்டுள்ளார்.
இத்தாலிய பிரதி வெளிவிவகார அமைச்சருடன், நான்கு பேர் கொண்ட வர்த்தக குழுவொன்றும் கொழும்பு வந்துள்ளது.