Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » ஊழல் யுகத்தை இலங்கை கடந்து வந்துள்ளது: ஜனாதிபதி

ஊழல் யுகத்தை இலங்கை கடந்து வந்துள்ளது: ஜனாதிபதி

article_1461607412-ms

ஊழலை எதிர்ப்பதற்கு இலங்கை தன்னை பூரணமாக அர்ப்பணிக்கும்’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் இலண்டன் நகரில் இடம்பெற்ற ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாட்டில் உரையாற்றியபோதே ஜனாதிபதி நேற்று (12) இதனைத் கூறினார்.

ஊழல், அரசியல் வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பாரிய குற்றச்சாட்டுக்களைக் கொண்ட ஒரு யுகத்தை இலங்கை கடந்து வந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த நிலைமைகளுக்கெதிராக மக்கள் வெளிப்படுத்திய அதிருப்தியின் பிரதிபலனாக, 2015 ஜனாதிபதித் தேர்தலில் அந்த ஆட்சியை மாற்றி நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்ததாகவும் கூறினார்.

ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் சட்ட ஆட்சியைப் பாதுகாத்தல் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் ஆட்சிபீடம் ஏறிய ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டிலிருந்து ஊழலை ஒழித்துக்கட்டுவதை ஒரு பிரதான கடமையாகக் கருதி நடவடிக்கை மேற்கொள்வதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்கான சில முக்கிய நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

முக்கியமான நிதிசார் குற்றங்கள் தொடர்பான விசாரணை செயன்முறை தற்போது விசேட நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூலம் அமுல்படுத்தப்படுவதாகவும்  கடந்த காலங்களில் ஒருசிலர் முறைகேடாக சம்பாதித்த சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இன்று உலகெங்கும் வியாபித்துள்ள ஊழலுக்கெதிராக பேராடுவதற்கு கைகோர்க்கும் ஒரு விசேட நடவடிக்கையாக இம்மாநாட்டை அறிமுகப்படுத்த முடியுமெனவும் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்களை கண்டறிவதற்கும் அவற்றை இனங்காண்பதற்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்காக மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள்பற்றி மகிழ்ச்சி எனவும் கூறினார்.

அவ்வாறே ஊழலுக்கெதிரான சர்வதேச ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் ஒன்றை தாபிப்பதற்கான மாநாட்டின் பிரேரணை பற்றியும் ஜனாதிபதி  மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாடு முதன்முதலில் 1983ஆம் ஆண்டு வொஷிங்டன் நகரில் ஆரம்பமானது. அன்று தொடக்கம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கொரு முறை கூடும் இம்மாநா, இன்று உலகின் முக்கியமானதொரு மாநாடாக மாற்றம் பெற்றுள்ளதுடன், ஊழல்மோசடி மற்றும் முறைகேடுகள் காரணமாக அரசதுறை, தனியார்துறை, சிவில் சமூகம் ஆகியவற்றுக்கு விளைவிக்கப்படும் பாதிப்பு தொடர்பாக கவனம் செலுத்தும் உலகின் முன்னணி அமைப்பாக இது பணியாற்றுகின்றது.

ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாடு 2016, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனால் இம்முறை இலண்டன் நகரில் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *