Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிதலும். அமரர் ராஜ்மோகன்(வசந்தன்) திருச்சிற்றம்பலம்

அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிதலும். அமரர் ராஜ்மோகன்(வசந்தன்) திருச்சிற்றம்பலம்

DSC_6115-300x219

இலைதுளிர் காலமும்
இலையுதிர் காலமாகிய உணர்வு – உன்
வசிப்பிடம் விட்டு நீ
வான்வழி பயணித்ததை எண்ணுகையில் ,,,,,

உரிமைகொண்டு உறவாடும்
உறவொன்று பிரிந்ததில்
ஓராயிரம் விண்மீன்கள்
ஒரே கணத்தில் தொலைந்த உணர்வு

மேற்கில் சூரியன் மறைந்திடினும்
கீழ் வானம் சிவப்பது போல் ,
மறுபடியும் நீ வேண்டும்
மழலை வடிவில் நம் உறவினிலே

கொண்டைக்கட்டை,வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ வதிவிடமாகவும் கொண்ட  அமரர்  ராஜ்மோகன்(வசந்தன்) திருச்சிற்றம்பலம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிதலும்.
கடந்த 12/04/2016 அன்று இறைபதமடைந்த எமது அன்புச்செல்வம் அமரர்  ராஜ்மோகன்(வசந்தன்) திருச்சிற்றம்பலம்(A.T மணி) அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 12/05/2016(வியாழன் )அன்று அதிகாலை 5.30 மணியளவில்  ராமேஸ்வரம் புனித தலத்தில் நடைபெற்றும்,தொடர்ந்து அன்னாரின் இல்லத்தில் (திருச்சி முகவரி:வசந்தநகர்,இல. 05 , 8 வது க்றொஸ்,ஜெயா விஸ்தரிப்பு,கரு மண்டபம்,திருச்சி.) நடைபெறும் வீட்டுகிருத்திய நிகழ்விலும், அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் .
மற்றும்  அன்னாரின் மரணசெய்தி கேட்டு மரணச்சடங்கில் நேரில் கலந்துகொண்டோருக்கும், தொலைபேசிவழியாக ஆறுதல் கூறியோருக்கும், மற்றும் பல்வேறு வழிகளில் உதவி புரிந்தோர்க்கும்  எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜ்குமார்  பெல்ஜியம்
தொலைபேசி: 0032487544363
AT ராஜன் — இந்தியா
தொலைபேசி: +917502187249
AT ராகவன் — இந்தியா
தொலைபேசி: +919655489906

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *