மூத்தோர் ஒன்றுகூடல் விழாவும், கௌரவிற்பு விழாவும் நேற்று நடைபெற்றது
கம்பர்மலை கலாவாணி சனசமூக நிலையத்தினால் மூத்தோர் ஒன்றுகூடல் விழாவும், கௌரவிற்பு விழாவும் நேற்று சனிக்கிழமை 11.30 மணிக்கு கலாவாணி சனசமூக நிலைய முன்றலில் நடைபெற்றது.
கலாவாணி சனசமூக நிலைய தலைவர் திரு.வே.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக காலாநிதி ஆறு திருமுகம் (அருஞ்சொற் செல்வர், தலைவர் சிவபூமி அறக்கட்டளை, தலைவர், துர்க்காதேவி தேவஸ்தானம் தெல்லிப்பளை) அவர்களும், ஆசியுரையினை திரு தண்டபாணி தேசிகர் (பிரதமகுரு முத்துமாரியம்மன் தேவஸ்தானம்) அவர்களும், மலர் வெளியீட்டு அறிமுகவுரை திரு.கி.இராஜதுரை (அதிபர் யா/கொற்றாவத்தை அ.மி.த.க.பாடசாலை) அவர்களும், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கெளரவ விருந்தினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
மங்கள விளக்கேற்றல், இறைவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் மூத்தோர் கௌரவிற்கப்பட்டார்கள்.