ஆற்றங்கரை வேலவனுக்கு ஆற்றங்கரை பதியாம் – நெடியகாடு பிள்ளையார் கோயில் – சிறப்புக்கவிதை
ஆற்றங்கரை வேலவனுக்கு ஆற்றங்கரை பதியாம்
செல்வச்சந்நிதிதனிலே திருவிழா
அவன் அண்ணன் கணபதியானுக்கு
நெடியாகாட்டு பதியிலே பெருவிழா
காலங்களும் இனைந்தனவாய்
அமைத்திட்டா; ஊரவா;
தம்பியைதா சிக்கசெல்கின்றவா;
உன்னையும் உன் பதியையும்
தொழுவது சாலச்சிறப்பாக
அமைத்திட்ட எம் கணநாதனே…
அண்டம் அல்லஅம்மை அப்பனே
உலகம் என உணர்த்தியகணங்களின்
பதியே கணபதியே கற்பகனே…..
உந்தன் ஆலயவளாகத்தில்
வளர்ந்தோங்கிநிற்கும்
உன்நாமத்தோடு இணைந்த
அதிசயவிருட்சசோலைகளும்
அபூர்வம் தான் எம் ஈழத்துநகர் களில்
நோக்கும் திசை எல்லாம் சிறப்புரைக்கும்
உந்தன் ஆலயபதியிலே பெருவிழா-இன்று
ஏழிசைபோல
ஏழாம் நாளிலே உன் மூஷிகவாகனத்தில்
இராஜ பதியைசுற்றிவந்து
இன்பமானவாழ்வளித்திடையா
திருச்சிற்றம்பலத்தானே……
வி.வல்வையரன் ஃ வி.டினேஸ்கரன்