விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப் பேர், நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் அருணி ஆட்டிக்கலவினால், குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்ட எட்டுப் பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும் விலக்கிக் கொள்வதாக, சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இதையடுத்தே, இவர்களை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்வதாக நீதிவான அருணி ஆட்டிக்கல அறிவித்தார்.
அதேவேளை, கடந்த 2015 மார்ச் 2ஆம் நாள் பிரான்ஸ் திரும்பும் போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு, கடற்புலிகளின் தளபதியாகப் பணியாற்றியவர் என்று குற்றம்சாட்டப்பட்ட பகீரதி முருகேசுவும் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
பிரான்சில் இருந்து பெற்றோரைப் பார்வையிட வந்த போதே இவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.