Friday , 10 January 2025
Lorem Ipsum

தமிழீழ தாயக விடுதலைக்காய் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூரும் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு, யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

இன்று நண்பகல் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி, மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் பங்கேற்றவர்கள், கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, அமைதி வணக்கம் செலுத்தி, மாவீரர்களை நினைவு கூர்ந்தனர்.

அதேவேளை, மாவீரர்கள் நினைவாக, பல்கலைக்கழக வளாகத்தில் மரங்களும் நாட்டப்பட்டன.

jaffna-uni-maveerar-2016-1jaffna-uni-maveerar-2016-2jaffna-uni-maveerar-2016-3jaffna-uni-maveerar-2016-4jaffna-uni-maveerar-2016-5

இதனிடையே, யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள்,  மாவீரர் நாளை நினைவுகூர்ந்தும், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 62 ஆவது பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்தும் பரவலாக வண்ணச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரில் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *