பிரபலமான வர்த்தக நாமம் பொறிக்கப்பட்டு பொதிசெய்யப்பட்ட சுமார் 63,000 கிலோகிராம் பாவனைக்குதவாத மிளகாய் தூள், சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஒருகொடவத்த களஞ்சியசாலையில் வைத்து இந்த பெருமளவான மிளகாய் தூள் பெக்கற்றுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த மிளகாய் தூள் பக்கெற்றுகள் பூஞ்சணம் பிடித்த நிலையில் காணப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட மிளகாய் தூளின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் எனவும் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள வியாபாரி ஒருவரே இதனை இறக்குமதி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
–