அரசியல் அழுத்தங்களால் வெளிநாடுகளில் புகலிடம் கோரிய இலங்கையர்களுக்கு, சிறிலங்கா கடவுச்சீட்டுகளை வழங்க, விதிக்கப்பட்டிருந்த தடையை சிறிலங்கா அரசாங்கம் நீக்கியுள்ளது.
வெளிநாடுகளின் புகலிடம் கோரியவர்களுக்கு, சிறிலங்கா துதரகங்கள், கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் தடைவிதித்தது.
இந்த தடை, சிறிலங்கா அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள, இலங்கையர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருப்பதாகவும், அனைத்துலக மனித உரிமைப் பிரகடனங்களுக்கு முரணாக இருப்பதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் ஆட்சியை மீள உறுதிப்படுத்தும் வகையிலும், நல்லிணக்க முயற்சிகளின் ஒரு கட்டமாகவும், இலங்கையர்களின் நடமாடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும், வெளிநாடுகளில் புகலிடம் தேடியவர்கள் சிறிலங்காவுக்குத் திரும்பி வருவதற்கான தடைகளை அகற்றுவதற்காகவும், புகலிடம் தேடியவர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.