ரயன் எயர் விமானத்தில் சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்ட இலங்கையர் ஒருவர், நோர்வேயின் மொஸ் விமான நிலையத்தில், நோர்வே காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டார்.
இலங்கையர் ஒருவரும், மற்றொரு வெளிநாட்டவரும் சந்தேகத்துக்கிடமான வகையில் நடந்து கொண்டதையடுத்தே, தடுத்து வைக்கப்பட்டதாக நோர்வே ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மன்செஸ்டர் நோக்கி விமானம் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த போது, கழிவறையில் இவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, இவர்கள் பரிமாறிய வார்த்தைகளில், குண்டு என்ற சொல் பயன்படுத்தப்பட்டதை பயணிகள் சிலர் செவிமடுத்ததாக விமான தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, விமானம் மொஸ் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு, குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் விமானத்தில் தேடுதல் நடத்தினர். எனினும், குண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதையடுத்து. இரண்டு பயணிகளும் விடுவிக்கப்பட்டனர். இதனால் விமானம் ஒரு மணிநேரம் தாமதமாகவே மன்செஸ்டர் நகரைச் சென்றடைந்தது.