விக்கியை மறந்தார் இலங்கை ஜனாதிபதி ஞாபகப்படுத்தினார் இந்தியப்பிரதமர்.
சர்வதேச யோகா தின நிகழ்வும் இந்திய நிதியுவியுடன் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கின் திறப்பு விழாவும் நேற்று இடம்பெற்றன.
இதில் மைதானத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மைத்திரி சிறியன ஆரம்ப உரையின் போது அவையில் இருந்த் வடமாகாண ஆளுநர் இந்தியப்பிரதமர் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் இந்தியத்துணைத்தூதுவர் ஆகியோரை விளித்துப் அரைத்து வணக்கம் செலுத்தினார். ஆனால் வர் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனுக்கு வணக்கம் செலுத்த தவறிவிட்டார்.
இவரைத்தொடர்ந்து காணொளியில் உரையாற்றிய இந்தியப்பிரதமர் நரேந்திரசிங் மோடி அவையில் இருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்ததுடன் வடமாகாண முதலமைச்சருக்கு முக்கியத்துவம் கொடுத்து தமது உரையில் வணக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.