Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » வாழ்வாதாரக் கொடுப்பனவும் மக்களின் அவலமும்

வாழ்வாதாரக் கொடுப்பனவும் மக்களின் அவலமும்

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கதிரவெளி பிரதேச செயலகத்தினால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மூலம் வாழ்வாதாரக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.அண்மையில் சுமார் 100 குடும்பங்களுக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவைப் பெறுவதற்காக சுமார் 25 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் இருந்து கைக்குழந்தைகளைத் தூக்கிய தாய்மார்களும்,முதியவர்களும்,வலு இழந்தவர்களும்,பெண்களும் குடும்பம் குடும்பமாக அதி காலையிலேயே கதிரவெளிக்கு வருகை தந்து நீண்டநேரமாகக் காத்திருந்து அவர்களால் வழங்கப்படுகின்ற சொற்ப பெறுமதியுள்ள கொடுப்பனவைப் பெறுவதற்காக நான்கு மணித்தியாலத்திற்கு மேலாகக் கொதிக்கும் வெயிலில் காத்து நிற்பதையே படத்தில் பார்க்கின்றீர்கள்.இவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் மட்டுமல்லாது போர் நடைபெற்ற காலப்பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள்.

போக்குவரத்துச் சேவைகள் குறைவாக இருப்பதால் முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தியே அவர்கள் வந்து தரையில் இருந்து காத்திருக்கும் அந்தக் காட்சி நெஞ்சையே உலுக்கிக் கொண்டிருந்தது…..ஏன் அங்கு கடமையாற்றும் அதிகாரிகளில் இருவர் தமது வாகனத்தில் அவர்களது சொந்த இடத்திற்குப் போய் அந்தச் சிறிய கொடுப்பனவை வழங்கியிருக்கலாமே…..?

எமது அதிகாரிகளின் மனமும்,உடலும் அந்த நொந்துபோன மக்களின் துயர வாழ்ககையை நோக்கி இறங்கி வரவேண்டும்….அப்பொழுதுதான் அங்கே மனித நேயத்தையும், அன்பையும், கருணையையும் பார்க்கலாம்.அந்த மக்களின் அவல வாழக்கைக்கு முடிவு காண்பதற்கு அந்தப் பிரதேசங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் முன்வரவேண்டும். எமது உடன் பிறப்புக்கள் துன்பத்தில் வாழ்தல் கண்டும் மனமிரங்காது இருப்பாது பாவமாகத் தெரிய வில்லையா…? இதுபோன்ற நெஞ்சை உருக்கும் சம்பவங்கள் கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் நிறையவே நடந்து கொண்டிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *