மனிதஉரிமைகள் தொடர்பாக அனைத்துலக சமூகத்துக்கு சிறிலங்கா அதிபரும், பிரதமரும் அளித்துள்ள வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்று பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், புதுடெல்லியில் நேற்று ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக அனைத்துலக சமூகம் ஆதரவு அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அனைத்துலக சமூகத்துக்கு அளித்துள்ள வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்பட வேண்டிய நிலையில் தான் உள்ளன.“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.