ஆஸ்திரேலியா வல்வை நலன்புரி சங்கம் சடட ரீதியாக ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தற்போதய நிர்வாக சபையினரின் இந்த முயற்சி வல்வை மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு இது ஓர் முன்னுதாரணமாகவும் விளங்குகின்றது.
கால் நூற்றாண்டுக்கு மேல் குண்டு தாக்குதலுக்கு உட்பட்டு சின்னா பின்னமாகிய வல்வை மண் பாரிய பொருளாதார கட்டுமான அபிவிருத்திகளுக்காக புலம்பெயர் அமைப்புகளை நாடி நிட்கின்றது. போரினால் நலிவடைந்து ஊனமுற்று வாழ்வுக்கு போராடும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய எந்த ஓர் புலம் பெயர் அமைப்பும் வல்வையில் இல்லை என்பது கசப்பான உண்மையாகும்.
திருவிழா மற்றும் google கேமரா கண்களுக்கு இந்த வடுக்கள் வலிகள் ஒருபோதும் தெரிய வாய்ப்புக்கள் இல்லை. வேலை வாய்ப்பின்மையால் வாடுபவர்கள், மலசல வசதிகள் இல்லாதவர்கள், போரினால் ஊனமுற்றவர்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் வலியை அனுபவிக்க சித்திரவதைக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை புலம் பெயர் மக்களுக்கு தெரியுமா?
அயலில் உள்ள ஊர்களில் புலம் பெயர் ஊர் அமைப்புகளே பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேட்கொள்கின்றன. போர் நிறைவுற்று ஏழு ஆண்டுகள் காத்திருக்கின்றோம் இங்கு பிள்ளையார் சுழி கூட போடப்படவில்லை. நலன்புரி சங்கங்கள் ஒன்றியங்கள் கவனத்துக்கு இவற்றை கொண்டு வருகின்றோம்.
வல்வெட்டித்துறை வாழ் மக்கள்