௭மது சைனிங்ஸ் கழகத்துடன் படிப்பகம் ,கோயில் எப்படி உருவாகியது என மிக சுருக்கமாக பதிவு .
குச்சம் கொட்டிலுக்கு சரஸ்வதி படம் வந்த வரலாறு .
1978ம் ஆண்டு படிப்பககொட்டிலில் சைனிங்ஸ் நண்பர்கள் கூடியிருந்த போது செல்வச்சன்நிதி கோயில் ஆனந்த ஆச்சிரமடத்தில் அன்னதானசோறு சாப்பிட சென்றனர் . அன்னதானம் சாப்பிட்டு கோயிலடிக்கு வந்தனர், கோயில் வீதியில் ஒரு படம் பிரேம் போட்டு விற்கும் கடை இருந்தது , எல்லோருக்கும் ஞாபகம் வந்தது , இன்று சரஸ்வதி பூசை ஆரம்பம் எங்கள் குச்சம் படிப்பகத்திற்கு பிரேம் போட்ட படம் இல்லை , நாள் காட்டி கலண்டர் சாமி படம் தான் இருக்கிறது , இங்கு ஒரு சரஸ்வதி படம் பிரேம் போட்டது வாங்குவோம் என முடிவு எடுத்தனர். எல்லோரும் காசு போட்டு படம் வாங்குவோம் என வாங்கினர் . 35 ரூபாய்க்கு சரஸ்வதி படம் வாங்கினர் .
[ 1 ] . [ உருத்திரி ]
தில்லையம்பலம் உருத்திரசிகாமணி ( உருத்திரி , குட்டிமணி )
[ 2 ] . [ கணேஸ் ]
உலகநேசம் கணேசதாஸ் ( குகதாஸ் அண்ணா ,கலாவின் தம்பி )
[ 3 ] . [ செல்லன் ]
ஆறுமுகபெருமாள் செல்வச்சந்திரன் ( ரெத்தினவேல் அண்ணாவின் மூன்றாவது தம்பி , பாலா அத்தானின் மச்சான் .
[ 4 ] .[ பாலகிட்டினி ]
கிட்டினர் பாலகிருஷ்ணன் ( ராசத்தியாக்காவின் தம்பி , J P மாஸ்டரின் மாமா )
[ 5 ] .[ ராயு ]
நாராணசாமி ராயு ( பாண்டி கம்பனி தில்லை ரவியின் இரண்டாவது தம்பி , ரைவர் குட்டியின் மச்சான் )
[ 6 ] . [ குட்டி இடியப்பகுட்டி ]
பழனிவேல் உருத்திரகுமார்
( ஆட்டோ ஜெயவேலுவின் இரண்டாவது தம்பி , சித்திரம் அண்ணா , ராசுமாமாவின் மச்சான் )
[ 7 ] . [ பாஸ்கர் ]
துரைராசா பாஸ்கரதாஸ்
( கொத்தியால் குகதாஸ் , ஜெயாக்காவின் தம்பி )
[ 8 ] . [ சந்திரன் ]
விசாகபெருமாள் சந்திரசேகரம்
( புடவைக்கடை ஐயப்பன் ராசா அண்ணவின் இரண்டாவது தம்பி ,விசாகு துரையின் தம்பி ) .
இந்த எட்டு ( 8 ) பெரும் தான் காசு கொடுத்து சரஸ்வதி படம் செல்வச்சன்நிதி கோயிலில் இருந்துவாங்கிகொண்டு வந்து குச்சம் படிப்பகக்கொட்டிலில் வைத்தவர்கள் .
அன்று பின்நேரம் எல்லோரும் படிப்பககொட்டிலில் இருந்தனர் . இன்று சரஸ்வதி பூசை தொடங்கின்றது நாங்களும் சரஸ்வதி வைப்போம் என முடிவு எடுத்தனர் .
படம் வாங்கி வந்த எல்லோரும் ஒவ்வொரு பூசை செய்யுங்கோ என எல்லோரும் கூறினர்கள் , அந்த இடத்தில் செல்வன் தனக்கு பூசை வேண்டாம் என செல்லிவிட்டார் . ஏழு பூசையை எடுத்து கொண்டனர் , மிகுதி இரண்டு பூசையை யார் செய்வது என யோசித்த போது அங்கு இருந்த சாந்தலிங்கம் அண்ணா ,
[ அருணசலம் சாநதலிங்கம் ] ( செல்வராணியக்காவின் இராண்டாவது தம்பி , நடராசாலிங்கம் அண்ணாவின் இராண்டாவது அண்ணா ) ஒரு பூசையும் ,
இரண்டாவது பூசையை
[ ரூபன் ] [ முருகுப்பிள்ளை ரூபன் ] (ரேவடி கடவுள் அப்பாவின் மூன்றாவது மகன் , வெள்ளையண்ணா , கமலரங்கன் அண்ணாவின் சகலன் )
பத்தாவது (10 ) நாள் பூசையை பொது மக்கள் பூசையாக நடத்துவது என முடிவு எடுத்தனர் . பின் நாளில் பத்தாவது வரும் சரஸ்வதி பூசையை [சுதந்திரராசா கனியக்கா ] ( கண்ணன் , சுரேனின் அப்பா , சுதந்திரரேசனின் மச்சான் , )
முதல் நாள் சரஸ்வதி பூசையை செய்தது .
[ துரைமணியண்ணா ]
காத்தமுத்து சத்திவேல்
( ஞானவேல் , ராசுக்குட்டியின் அண்ணா )
முக்கியகுறிப்பு . அன்றைய தின பூசையில் பலர் கலந்து சிறபித்தார்கள் . பூசை முடிந்த பின்பு எல்லோறையும் புதிய சரஸ்வதி படத்துடன் வைத்து போட்டோ எடுத்தனர் . தற்போது அன்று எடுத்த சரஸ்வதி படம் இருந்தால் இப்பகுதியில் பதிவு செய்யவும்.
[ தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும் .]
குச்சம் படிப்பகத்திற்கு எப்பொழுது அடிக்கல் நாட்டப்பட்டது ( போடப்பட்டது ) விபரம் தொடரும் ……….
நன்றி :உரித்திரியண்ணா