சமீபத்தில் அயர்லாந்தில் (டப்ளின்) நடைபெற்ற 6th WUKF World Karate Championships போட்டியில் சாம்பியனாகி தங்கம் வென்று வந்திருக்கின்றார்.
36 நாடுகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான போட்டியாளர்கள் கலந்து கொண்ட மாபெரும் போட்டியில் தான் அகிலன் தங்கம் வென்று வல்வைக்குப் பெருமை சேர்த்திருக்கின்றார்.
கராத்தேயில் தனது ஆறு வயதில் பாயத் தொடங்கிய இந்தக் குட்டிப் புலி, இப்போது புதிய வேகத்தோடு சீறிப் பாயத் தொடங்கியிருக்கின்றது.
இந்தக் குட்டிப் பையன் இதுவரை வென்று குவித்த வெற்றிக் கிண்ணங்கள், பதக்கங்கள் என வீட்டு வரவேற்பறை முழுவதும் நிரம்பி வழிகின்றன.
போட்டோ எடுக்கப் போன என்னிடம்
இதுவரை வென்ற போட்டிகளின் தொகுப்பைக் கொண்டு வந்து, அங்கிள் பாருங்கோ என ஆனந்தத்தோடு காட்டுகிறார் அகிலன். பக்கம் பக்கமாக நிரம்பி வழிகிறது..எல்லாவற்றையும் எழுத இங்கு இடமும் போதாது.
ஆம்…. இந்தக் குட்டிப் பையன் கராத்தேயில் இதுவரை
சாதித்த வெற்றிகள் ஏராளம்..
அது மட்டுமில்லை…அகிலனின் அக்கா ஆர்த்தியும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் போலந்து நாட்டில் நடைபெற்ற கராத்தே போட்டியில் உலக சாம்பியனாகி தங்கம் வென்று வந்த மங்கை தான்.
இந்தச் சாதனைகள் அனைத்தும் சாத்தியமாவதற்கு ஒரே காரணம் இவர்களின் தாயார் திருமதி கவிதாவே தான்.
அக்காவும் தம்பியும் சேர்ந்து மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வேண்டும். வல்வைக்கு பெருமையை சேர்க்க வேண்டும் என நாமும் வாழ்த்துவோம்.