அண்மையில் நூற்றாண்டு கால பழமை வாய்ந்த மரங்கள் மாகாண சபை உறுப்பினரால் முறிக்கப்பட்டு கல்வியை சீர்குலைக்கும் வகையில் கூடைப்பந்து மைதானம் அமைக்கப்பட்டிருந்தது. கல்லூரி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் வல்வை மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து கூடைப்பந்து மைதானம் அத்திவாரத்துடன் அகற்றப்பட்டு நிழல் தரும் மரங்கள் நடுவதட்கு பாடசாலை அபிவிருத்திச்சங்கம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
மாகாண சபை உறுப்பினர் அத்துமீறலால் அழிக்கப்பட்ட கல்லூரி வளாக மேடை கற்குவியல்கள் அப்புறப்படுத்தப்பட்டு மரக்கன்றுகள் நடுவதற்குரிய குழிகள் இரவிரவாக வெட்டி எரு இட்டு நீர் நிரப்பப்பட்டது. வலயக்கல்வி பணிப்பாளர் மங்களகரமாக ஆரம்பித்து வைக்க மரக்கன்றுகள் நடும் வரலாற்று நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. மிகக்குறுகிய காலப்பகுதியில் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய பெற்றோர் ஆசிரியர் மற்றும் பழைய மாணவர்களுக்கும் இத்திட்டத்துக்கு அனுசரணை வழங்கிய வல்வெட்டித்துறை நலன்புரி சங்கம் (கனடா) அமைப்புக்கு சிதம்பராக்கல்லூரி சர்வதேச பழையமாணவர் சங்கம் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.