வடக்கு கடலில் தென்பகுதி மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதி அளித்த அதிகாரிகளின் விபரங்களை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, உத்தரவிட்டுள்ளார்.
கடற்றொழில் அமைச்சின் செயலர் மங்களலிக அதிகாரிக்கே அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். வடக்கு கடலில், தென்பகுதி மீனவர்கள் மீன்பிடிப்பதற்கும் அவர் தடைவிதித்துள்ளார்.
வடக்கு கடலில், திடீரென தென்பகுதி மீனவர்கள் மீன்பிடிப்பது அதிகரித்ததையடுத்து, இந்த விவகாரம் தீவிரமடைந்தது.
ஏற்கனவே இந்திய மீனவர்களின் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்கள் இது பற்றி முறைப்பாடுகளைச் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.