வடக்கில் போரினால் இடம்பெயர்ந்த சிங்கள, மற்றும் முஸ்லிம்களை மீளக் குடியமர்த்துவதற்கான செயலணி ஒன்றை உருவாக்க சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கொழும்பில் நேற்று, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், இணை அமைச்சரவைப் பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக இந்த தகவலை வெளியிட்டார்.
‘இந்தச் செயலணிக்கு அமைச்சர்கள் ரிசாத் பதியுதீன் மற்றும் பெசர் முஸ்தபா ஆகியோர் இணைத் தலைவர்களாக இருப்பார்கள்.
1980களில் இருந்து, தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தனர். அவர்கள், போரின் முடிவில் சொந்த இடங்களுக்குத் திரும்பத் தொடங்கினர். எனினும், அவர்கள் அனைவருக்கும் மீளக் குடியேறுவதற்குப் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கவில்லை.
வடக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு 16,120 வீடுகளும், சிங்களவர்களுக்கு 5543 வீடுகளும் தேவைப்படுகின்றன.
இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளிட்ட அரசியல் உரிமைகள் கிடைக்கவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.