நவராத்திரி பண்டிகையில் முக்கிய அம்சமான சரஸ்வதி பூஜை உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உடைகளை அணிந்து ஓர் கட்டுக்கோப்புக்குள் நின்று விழாவை சிறப்பமைத்தது எல்லோரையும் வியப்படைய வைத்தது.
கல்வி, செல்வம், வீரம் – இந்த மூன்று வளங்களும் நிரம்பப் பெற்றவர்களே உயர்வானவர்களாக போற்றப்படுவார்கள். தனி மனிதர்கள் மட்டுமின்றி, இந்த வளங்கள் அதிகம் இருக்கக்கூடிய தேசமே சிறந்த தேசமாக போற்றப்படுகிறது.கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்குவதை மிகவும் இலகுவான முறையில் எங்கள் குழந்தை செல்வங்களுக்கு நாம் உணர்த்தியுள்ளோம்.
கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளில் குழந்தைகள் உற்சாகத்துடன் பங்குபற்றி தனி திறமைகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
வல்வையில் கல்வி அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வரும் வல்வை 73 அமைப்பினர் உயர்தர கணித விஞ்ஞான பிரத்தியோக வகுப்புகளை முதன் முதலில் ஆரம்பித்து மாதாந்தம் ரூ 50,000 VEDA நிறுவனத்துக்கு வழங்கி வருகின்றனர். அத்துடன் அண்மையில் இரு கணனிகளை வல்வை 73 உறுப்பினர் பழையமாணவர் திரு ராமச்சந்திரன் (நேரு) சிதம்பராக்கல்லூரிக்கு வழங்கியிருந்தார். சிதம்பராகல்லூரிக்கு பதினான்கு வருடங்களுக்கு பின்பு இரு கணனிகள் பழைய மாணவரினால் அன்பளிப்பு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.