முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களின் ஏழாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழத்தில் இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில், இன்றுகாலை முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பெருமளவு மாணவர்களும், பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.