இந்திய அரசின் நிதியுதவியுடன், மீளப் புனரமைக்கப்பட்டுள்ள யாழ். தரையப்பா விளையாட்டரங்கை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து திறந்து வைக்கவுள்ளனர்.
145 மில்லியன் ரூபா செலவில் துரையாப்பா விளையாட்டங்கை இந்திய அரசாங்கம் புனரமைத்துள்ளது.
இந்த விளையாட்டரங்கு எதிர்வரும் 18ஆம் நாள் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார்.
அதேவேளை, புதுடெல்லியில் இருந்து, காணொளிக் காட்சி மூலமாக, இணைந்து கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் இணைந்து இந்த விளையாட்டரங்கை திறந்து வைக்கவுள்ளனர்.
இந்த நிகழ்வில் இந்தியப் பிரதமரின் உரை, காணொளிக் காட்சி மூலம் இடம்பெறவுள்ளது.