Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » யாழில் 26 வருடங்களின் பின் மீள ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள்..

யாழில் 26 வருடங்களின் பின் மீள ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள்..

யாழ்.நடேஸ்வரா கல்லூரி மற்றும் யாழ்.நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயம் ஆகியன கடந்த 26 வருடங்களுக்குப் பின்னர் சொந்த இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 26 வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர்.

அதனை தொடர்ந்து குறித்அதனைத் தொடர்ந்து அப்பகுதியினை  கடந்த 26 வருடகாலமாக இராணுவத்தினர் கையகப்படுத்தி உயர் பாதுகாப்பு வலயமாக பிரடகனப்படுத்தி இருந்தனர்.

பாடசாலைகள் இரண்டும் 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி முதல் சொந்தக்கட்டடங்களில் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 12 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பாடசாலையை மீளவும் சொந்த இடத்தில் இயங்குவதற்கு அனுமதித்தார்.

இருந்த போதிலும் இன்றைய தினமே பாடசாலை சொந்த இடத்தில் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர்  செ. சந்திரராஜா தலைமையில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் அதிதிகளாக யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சோ. சேனாதிராஜா, மற்றும் ஈ.சரவணபவன்,  வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்  தம்பிராசா குருகுலராசா, மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் , எம்.கே.சிவாஜிலிங்கம் , பா.கஜதீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் பாடசாலை பழையமாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரும் இதன் போது கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *