முல்லைத்தீவு மாவட்டத்திலே மாணவர்களை அரச பேரூந்துகள் ஏற்றுவதில்லையென்ற குற்றச்சாட்டு பெற்றோர்களினால் தெரிவிக்கப்படுகின்றது.
விசுவமடு, உடையார்கட்டு, வள்ளிபுனம், தேவிபுரம் ஆகிய பகுதி மாணவர்களை அரச பேரூந்துகள் ஏற்றுவதில்லையென்ற குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. இது தொடர்பாக இலங்கை போக்குவரத்துச் சபையின் முல்லைத்தீவு முகாமையாளர் கருத்துத் தெரிவிக்கையில் கிளிநொச்சி, பருத்தித்துறை ஆகிய சாலைகளின் பேரூந்துகளே பரந்தனுக்கும் புதுக்குடியிருப்புக்கும் இடையிலான பகுதிகளில் மாணவர்களை ஏற்றுவதில்லை என்ற முறைப்பாடு கிடைத்துள்ளது.
முல்லைத்தீவிற்குரிய சாலைக்குரிய பேரூந்துகள் மாணவர்களை ஏற்றுவதாகவும் தெரிவித்தார். புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவிலே பல கிராமங்கள் போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.