சிறிலங்கா காவல்துறையின், முன்னாள் மூத்த காவல்துறை மா அதிபர், அனுர சேனநாயக்க இன்று, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட அனுர சேனநாயக்கவிடம், வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், அவர் கைது செய்யப்பட்டார்.
அவரை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலை தொடர்பாக அனுர சேனநாயக்கவிடம் ஏற்கனவே இரண்டு நாட்கள் விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட அனுர சேனநாயக்க, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.