வடக்கு மாகாண முதலமைச்சர் நிதிய, நியதிச்சட்டம், நேற்று வடக்கு மாகாணசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. நேற்று நடந்த வடக்கு மாகாணசபையின் 54 ஆவது அமர்வில், முதலமைச்சர் நிதிய நியதிச்சட்ட பிரேரணையை, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சமர்ப்பித்தார்.
இதையடுத்து, இந்தப் பிரேரணை மீது விவாதம் நடத்தப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, சபையில் நிறைவேற்றப்பட்டது.
வடமாகாணசபையின் அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் இந்த நியதிச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த நியதிச்சட்டம், ஆளுனரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க முடியும்.
முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்க, முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வடக்கு மாகாணசபைக்கு அனுமதி அளிக்கவில்லை.
தற்போதைய அரசாங்கம் அதற்கு இணங்கியுள்ள நிலையிலேயே, முதலமைச்சர் நிதியத்தை உருவாக்கும் நியதிச்சட்டம் மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.