லண்டனிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ரெய்னர்ஸ் லேனில் ஏற்பாடாகி உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார்.
‘இரட்டை நகர்’ உடன்படிக்கை கடந்த செய்வாய்க்கிழமை கைச்சாத்தான பின்னர் பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டுவரும் முதலமைச்சர் தாயகம் திரும்புவதற்கு முன்னர் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஆர்வமாக இருப்பதால் இந்த கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் 440 Alexandra Ave, Harrow HA2 9TL என்ற முகவரியில் உள்ள Zoroastrian Centre இல் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 8 மணி வரை நடைபெற இருக்கும் இந்த கூட்டத்துக்கான அனுமதி இலவசம் என்றும் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை கலந்துகொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பல கலை நிகழ்ச்சிகளும் இந்த கூட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை கிங்ஸ்ரன் மற்றும் யாழ்பாணம் ஆகிய நகரங்கள் இடையே ‘இரட்டை நகர்’ உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காகவே வட மாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் லண்டன் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.