மகிந்த ஆதரவு கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் எட்டுப் பேரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவிகளில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிரடியாக நீக்கியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து மைத்திரிபால சிறிசேன அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் எட்டுப்பேரின் பதவிகளே நேற்று திடீரெனப் பறிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர்களாக றோகித அபேகுணவர்த்தன, பவித்ரா வன்னியாராச்சி, சி.பி.ரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர்த்தன, கெஹலிய ரம்புக்வெல, ஜெகத் பாலசூரிய, உதித் லொக்கு பண்டார, காமினி லொக்குகே ஆகியோரே மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில், 15 தேர்தல் தொகுதிகளுக்கும், 24 மாவட்டங்களுக்கும் புதிய அமைப்பாளர்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்த அணியைப் பலவீனப்படுத்தும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.