க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்கள் தமது விண்ணப்பப்படிவங்களை பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தமது விண்ணப்பப்படிவங்களை ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருந்த மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கு ஏற்பவும் பதிவுத் தபால் மூலம் பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.