மூன்று நாள் பயணமாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதுடெல்லியைச் சென்றடைந்தார். நியூசிலாந்தில் இருந்து புதுடெல்லி விமான நிலையத்தைச் சென்றடைந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா விமான நிலையத்தில் வரவேற்றார்.
அத்துடன் புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வகீஸ்வரா மற்றும் தூதரக அதிகாரிகளும் சிறிலங்கா பிரதமரை வரவேற்பதற்காக விமான நிலையம் சென்றிருந்தனர்.