புகழேந்தி தங்கராஜ் இன் ‘விடுதலையின் முகவரி’ ‘நெருப்புப் பூச்சாண்டி’ ஆகிய நூலகள் சென்னையில் வெளியிடப்பட்டது!
இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் தமிழக அரசியல் வார இதழுக்காக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘விடுதலையின் முகவரி’ மற்றும் ‘நெருப்புப் பூச்சாண்டு’ நூலகள் சென்னையில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி இயக்குனர் புகழேந்தி தங்கராஜின் “விடுதலையின் முகவரி” மற்றும் “நெருப்புப் பூச்சாண்டி” ஆகிய இரண்டு நூல்கள் இன்று (09.06.2015) காலை சென்னையில் கவிதா பதிப்பகத்தில் வெளியிடப்பட்டன.
மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு அவர்கள் நூல்களை வெளியிட தமிழ்த் தேசிய தலைவர் பழ.நெடுமாறன், நீதி நாயகம் கே.சந்துரு ஆகியோர் நூல்களைப் பெற்றுக்கொண்டனர். அருகில் கவிதா பதிப்பகம் சேது சொக்கலிங்கம், புகழேந்தி தங்கராஜ்.