Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர்களிற்கு பிரித்தானிய அரசாங்கம் விடுக்கும் தகவல்

பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர்களிற்கு பிரித்தானிய அரசாங்கம் விடுக்கும் தகவல்

பிரித்தானியாவில் குடிவரவு சட்டத்தில் மிகப் பெரிய மாற்றத்தை IMMIGIRATION ACT 2016 நிகழ்த்தியுள்ளது.

இச்சட்டம் மிகையான அதிகாரத்தை உள்துறை செயலகத்தின் (HOME OFFICE) அமுலாக்கும் அமர்வுக்கு (ENFORCEMENT UNIT) வழங்கியுள்ளது, அதனுடன் குடிவரவு விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்குகின்றது.

வேலை பார்த்தல்

பிரித்தானியாவில் வேலை பார்ப்பதற்கு அனுமதி இல்லாமல் அல்லது குறிப்பிட்ட வேலை செய்வதற்கு விஷேட அனுமதி வழங்கி அவ்வேலை செய்யாமல் வேறொரு வேலை செய்தால், இச்சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும்.

இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும். அவ்வாறான குற்றத்தை இழைப்பவர்களுக்கு குடிவரவு ரிதீயான எவ்வித சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது.

வேலை பார்ப்பதற்கு அனுமதி இல்லாமல் வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு (employor) 5 ஆண்டுக்கு மேற்படாத சிறைத்தண்டனையும் அபராதமும் வழங்கப்படும். இச்சட்டமானது 12ம் திகதி ஆடி மாதம் 2016-ல் இருந்து அமுலுக்கு வருகின்றது.

வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்துபவர் தொடர்பான அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்கள் நிபுணத்துவக் கட்டணம் (skill charge) செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

உள்துறை அமைச்சு ஒரு வருடத்துக்கான நிபுணத்துவ கட்டணம் € 2,000யும் சிறிய அமைப்புகளுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் நிபுணத்துவ கட்டணம் € 364 அறவிட தீர்மானித்துள்ளது.

ஆனால் PHD-level மற்றும் tier-4 மாணவர்கள் வேலை பார்க்கும் குடிவரவு (tier-2) நிலைக்கு மாறும் போது இக்கட்டணம் அறிவிடப்படமாட்டது, இந்த சட்ட மாற்றமானது சித்திரை மாதம் 2017 ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும்.

குடியிருப்புகளில் குடியிருப்பு தொடர்பான மாற்றங்கள் (Residential Finance)

பிரித்தானியாவில் குடிவரவு திணைக்களத்தின் அனுமதி இல்லாமல் வருபவர்களை வீட்டு உரிமையாளர்கள் அவர்களுக்கு சரியான முறையினை பின்பற்றி வெளியேற்ற வேண்டும்.

இச்சட்டமானது இச்சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னுள்ள வாடகை ஒப்பந்தத்திற்கும் இனி வழங்க இருக்கும் வாடகை ஒப்பந்தத்திற்கும் ஏற்புடையதாகும். இச்சட்டத்தை பேணாத வீட்டு உரிமையாளர்களுக்கு 5 வருடத்துக்கு உட்பட்ட சிறைத்தண்டனையும் அல்லது அபராதமும் அல்லது இரண்டும் சேர்ந்து வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *