இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரைதட்டி நிற்கும் படகில் இருந்த இலங்கைத் தமிழ் அகதிகளை தரையிறங்குவதற்கு இந்தோனேசிய அரசாங்கம் இன்று அனுமதி அளித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை தொடக்கம், ஒருவாரகாலமாக ஆச்சே மாகாண கடற்கரையில் படகில் இருந்த அகதிகள் 44 பேரும் இன்று தரையிறங்க அனுமதிக்கப்பட்டனர்.
படகில் உள்ள அகதிகளை தரையிறங்க அனுமதிக்குமாறு இந்தோனேசிய உதவி அதிபர் யூசுப் கல்லா, ஆச்சே மாகாண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை அடுத்தே, அகதிகள் கரையில் இறக்கப்பட்டனர்.
அகதிகளை ஒளிப்படம் எடுத்து அடையாளங்களை பதிவு செய்யும் பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக அங்குள்ள ஏஎவ்பி செய்தியாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.