மரணதண்டனைக்கு எதிரான ஆறாவது உலக மாநாட்டில், பங்கேற்பதற்காக ஒஸ்லோ சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நோர்வே பிரதமரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நோர்வே பிரதமர் எர்னா சொல்பேர்க்குடன் நேற்று நடந்த இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்டேயை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.