சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வாவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் நேற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மூத்த பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர, பேராசிரியர் ஹேவாவாதுகே சிறில், மூத்த பேராசிரியர் பிரசாந்த குணவர்த்தன ஆகியோரே இந்த மனுவைத் தாக்கல் செய்தனர்.
மருதானையில் கடந்த மார்ச் 12ஆம் நாள், ஜாதிக எக்கமுத்துவ அமைப்பினால், ஒழங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் முன்னாள் தலைமை நீதியரசர், சரத் என் சில்வா, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உரையாற்றினார் என்று அவர்கள் தமது மனுவில் கூறியுள்ளனர்.
ஒக்ரோபர் 18ஆம் நாளும், அவர் அதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறார் என்றும், எனவே உச்சநீதிமன்றம் அவருக்கு எதிராக விசாரணை நடத்தி, சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.