எங்களுக்கு நீங்கள் பிரதமரும் இல்லை. ஜனாதிபதியும் இல்லை. மக்கள் பிரதிநிதியும் இல்லை. எனினும் எம்மில் பலரை நீங்கள் கவர்ந்திருக்கின்றீர்கள். எம் இனத்தில் நீங்கள் பிறக்கவுமில்லை. இருந்த போதும் எமக்ககாக உங்கள் குரல்கள் ஓங்கி ஒலித்தன.
கோர்ட் கழட்டாத குடை பிடிக்க உதவியாளர்கள் தேடும் எங்கள் பிரதிநிதிகளுக்கு மத்தியில் நீங்கள் கோர்ட்டை கழட்டிப் போட்டு விட்டு கொட்டிலுக்குள் சென்று அகதியாக்கப்பட்ட எம்மின சொந்தங்களுடன் உறவாடியவர்.
மக்கள் மத்தியில் வெட்டி வீர வசனங்கள் பேசிவிட்டு கொழும்பு சென்று கொஞ்சிக் குலாவும் எம்மினப் பிரதிநிதிகள் மத்தியில், நீங்கள் கொழும்பில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டிலேயே அழிக்கப்பட்ட எம்மினத்திற்காக நீதி கோரி ஸ்ரீலங்காவை எச்சரித்தவர்.
இனப்பிரச்சனையைக் காரணம் காட்டி ஸ்ரீலங்கா வந்து குளிரூட்டிய அறைகளில் உயர்மட்ட அரசியல் சந்திப்புக்களிலும் நட்சத்திர ஹோட்டல்களில் ஆடம்பர விழாக்களிலும் சுதந்திர தின நிகழ்வுகளிலும் ஜெயந்தி தினங்களிலும் கலந்து கொண்டு உல்லாசப் பிரயாணிகளாக வந்து செல்லும் வெளிநாட்டுத் தலைவர்கள் மத்தியில், நீங்கள் உண்ண வழியின்றி உறங்க வழியின்றி வாழ்வதற்கு வக்கற்று நிர்க்கதியாக நின்ற எம்மக்களை காண வடக்கிற்கு வந்து ஆறுதல் படுத்தியவர்.
இவை தான் உங்களை எங்களின் நாயகனாக்கியது. ஏனையவர்களிடமிருந்து வேறுபட்டுத் தெரிந்தீர்கள். வேற்றுமை கடந்தும் நாங்கள் உங்களை நேசித்தோம்.
உங்கள் பதவி துறப்பு பிரித்தானிய மக்களுக்கு மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட எம்மினத்திற்கும் மனவருத்தமே. இன மத பேதமின்றி மக்கள் மனம் கவர்ந்த நாயகனே சென்று வாருங்கள். உங்கள் எதிர்கால வாழ்விலும் மனைவி பிள்ளைகளுடன் மகிழ்வுற்று வாழ்வதற்கு மன நிறைந்த வாழ்த்துக்கள்………..
#நிறத்தில்_மட்டுமல்ல_நல்_உள்