வல்வெட்டித்துறை மொடேர்ன் கல்வி நிலைய உரிமையாளர் தவக்குமாரும், லண்டனில் இருந்து வந்து நிற்கும் சுரேஸ்குமார் என்பவரும் வல்வெட்டி துறை இந்து தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயதுச் சிறுவனை தொன்டமனாறு கடற்கரையில் வைத்து இரவு நேரத்தில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியிருந்தார். குறித்த செய்தியை நாம் காணொளியாக பிரசுரித்திருந்தோம்.
இதனையடுத்து தவக்குமார் உட்பட்ட 5 பேரையும் வல்வெட்டித்துறைப் பொலிசார் நேற்று அதிகாலை கைது செய்தனர். இவர்களை நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் ஆயர்ப்படுத்திய போது எதிர்வரும் 1ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுளார்.
பொலிசார் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையை வல்வெட்டித்துறை மக்கள் பாராட்டியுள்ளனர். இவ்வாறான கேவலமான நடவடிக்கைகளை கல்விச்சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களும் செய்வதை ஒரு போதும் மன்னிக்ககூடாது என்பதையும் அவர்கள் கூறியுள்ளனர்.
பொலிசார் இவ்வாறான நடவடிக்கைகளை துரிதமாக எடுப்பதால் சமூகவிரோதிகளின் நடவடிக்கை குறைவடைய சந்தர்ப்பம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சமூகப்புறள்வான நடவடிக்கைகளை எமது இணையத்தளமும் தொடர்ச்சியாக வெளிக்காட்டி நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.