கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் இருந்த சிறிலங்கா இராணுவ தொண்டர்படையைச் சேர்ந்த 70 ஆயிரம் படையினரின், தனிப்பட்ட ஆவணங்கள், நேற்றுமுன்தினம் நடந்த வெடிவிபத்தில் முற்றாக அழிந்து போயிருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா இராணுவ தொண்டர்படையின் தலைமையகமாக சலாவ இராணுவ முகாமே இருந்து வந்தது.
அங்கு, சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் தொண்டர் படையினர் 70 ஆயிரம் பேரின் தனிப்பட்ட ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன.
அவை வெடிவிபத்தில் முற்றாக நாசமாகியிருப்பதாகவும், அவற்றை மீளப் பெறவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.