அத்துடன் பொலிசார் இவர்களைக் கைது செய்திருந்தாலும் இவர்கள் 5 பேரும் பயணித்த வாகனத்தை பொலிசார் கைப்பற்றாது விட்டுள்ளது அப்பகுதி மக்களிடத்தில் பெரும் சந்தேகத்தை உண்டுபண்ணியுள்ளது. குறித்த வாகனத்தில் வைத்தே இவர்கள் பல துஸ்பிரயோகங்களையும் சமூகவிரோ செயற்பாடுகளையும் செய்து வந்துள்ளார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இக் காமுகர்கள் கைது செய்யப்பட்டதால் வல்வெட்டி, வல்வெட்டித்துறைப் பகுதியில் இவர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டும் அச்சுறுத்தல் மற்றும் மானப் பிரச்சனை காரணமாக மௌனமாக இருந்த பலர் பெரும் சந்தோசம் அடைந்துள்ளனர். இவர்கள் தொடர்பாக குறித்த பகுதிகளில் விசாரித்ததில் கைது செய்யப்பட்ட இந்த 5 பேரும் மிகப் பெரும் சமூகப்பிறழ்வுகளை உண்டாக்கும் குற்றவாளிகள் என்பது எம்மால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் தற்போது பிணையில் வருவதற்கு பெரும் முயற்சிகள் எடுத்துவருவதாகவும் இதற்காக வல்வெட்டித்துறைப் பொலிசார் சிலரையும் தமக்குச் சார்பாக கொண்டுவர முயற்சித்து வருவதாகவும் தெரியவருகின்றது.
எமது இணையத்தளத்தில் செய்தி வெளியாகிய பின்னரே பொலிசார் குறித்த காமுகர்களைக் கைது செய்துள்ளனர். இல்லாவிட்டால் இவர்களின் துஸ்பிரயோகம் வெளியே வந்திருக்க முடியாது.
இக் காமுகர்களில் ஒருவன் வல்வெட்டித்துறைப் பகுதியில் மொடேன் கல்வி நிலைய உரிமையாளரான குமாரசாமி தவக்குமார். இவன் எந்தவித உயர்கல்வித் தகுதியும் இன்றி குறித்த கல்வி நிலையத்தை நடாத்தி வந்துள்ளான்.
இவனது கல்விநிலையமான மொடேன் கல்வி நிலையத்தைத் தவிர வேறு பெரிய கல்வி நிலையங்கள் அப்பகுதியில் இல்லை என்பதும் ஏனைய கல்வி நிலையங்கள் நெல்லியடிப்பகுதியில் இருப்பதால் வல்வெட்டி, வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் இந்தக் கல்வி நிலையத்தில் பிள்ளைகளைப் படிக்க அனுப்பியுள்ளனர்.
இவன் இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி அங்கு வரும் மாணவிகள் சிலருக்கு பாலியல்தொல்லைகள் கொடுத்துள்ளான். இதனால் பெற்றோரால் தாக்கப்பட்டும் எச்சரிக்கை செய்யப்பட்டுமுள்ளான். தமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் இவனைப் பற்றி பொலிசாரிடம் முறையிடவில்லை எனவும் அத்துடன் இவனுக்கு வல்வெட்டித்துறைபொலிசில் இருக்கும் சில பொலிசாரின் செல்வாக்கு காரணமாக பொலிசார் இவன் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்ற காரணத்தால் இவனது பாலியல் தொல்லைகள் மறைக்கப்பட்டுள்ளன.
இவன் விடுதலைப்புலிகளின் காலத்திலும் இவ்வாறான துஸ்பிரயோக முயற்சியில் ஈடுபட்டு புலிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவனது மனைவியான ஆசிரியை ஒரு பட்டதாரியாவார். குறித்த ஆசிரியை பாடசாலைக்குச் சென்றதும் இவன் பல பெண்களை தனது வீ்ட்டுக்கு அழைத்து வந்து பாலியல்துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் வித்தியா எனும் மாணவி கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கும் அதன் பின்னர் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு பொலிசாரின் அசண்டையீமே காரணம் என குடாநாட்டில் உள்ள பொதுமக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போது குமாரசாமி தவக்குமார் மற்றும் ஏனைய 5 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டால் பொலிசாரின் மீதும் நீதித்துறை மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைந்து போக வாய்ப்புள்ளது.
யாழ்ப்பாணத்தில் தற்போது துணிச்சலாக நடவடிக்கை எடுக்கும் மேல்நீதிமன்ற நீதிபதி ஐயாவுக்கு இது சமர்ப்பணம்.