திருகோணமலையை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சிங்கப்பூரின் உட்கட்டமைப்பு ஆலோசனை நிறுவனமான சேர்பனா ஜுரோங் நிறுவனத்துக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதன்படி, திருகோணமலைப் பெருநகரப் பகுதி, மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பான நீண்டகால அபிவிருத்தித் திட்டத்தை, சிங்கப்பூர் நிறுவனம் வரையவுள்ளது.
சிறிலங்கா வந்திருந்த சிங்கப்பூரின் வர்த்தக அமைச்சர் ஈஸ்வரன் மற்றும் சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் முன்னிலையில், நேற்று முன்தினம் இந்த புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.