தாம் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலராகப் பதவி வகித்த காலத்தில், சிறிலங்கா படைகளால் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தி கார்டியன் நாளிதழ் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக பதிலளித்துள்ள அவர், ”நான் பாதுகாப்புச் செயலராகப் பணியில் இருந்த காலத்தில், கொத்தணிக் குண்டுகள் கொள்வனவு செய்யப்படவில்லை.
எனது காலத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்று உறுதியாக கூற முடியும்.
வெளியிடப்பட்டுள்ள சில ஒளிப்படங்களை மாத்திரம், சான்றாக கருத முடியாது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஏனைய ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்னதாக இந்தக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியும், இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், ஒவ்வொரு ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் புாதும் எழுப்பப்படுவதாக கூறியிருக்கிறார்.