ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான விவகாரத்தை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளதாக, அனைத்துலக வர்த்தக மற்றும், மூலோபாய கொள்கைகள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.
ஜப்பானில் நடந்த ஜி-7 மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், ஜப்பான் சென்றிருந்த அமைச்சர் மலிக் சமரவிக்கிரம நாடு திரும்பிய பின்னர், கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள நல்லாட்சி மற்றும் மாற்றங்களினால், அனைத்துலக நாடுகளின் சிறிலங்கா மீதான பார்வை மாற்றமடைந்துள்ள நிலையில் ஜெனிவா பிரச்சினையை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.