ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறும் ஜி-7 நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் இன்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கல், பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலன்ட், கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடே, இத்தாலியப் பிரதமர் மற்ரோ ரென்சி, ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று காலை ஆசியாவின் உறுதிப்பாடும் செழிப்பும் என்ற தலைப்பில் நடைபெறவுள்ள, தனி நிகழ்வில், ஜி7 நாடுகளின் தலைவர்களுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பேச்சுக்களை நடத்துவார். மதியஉணவுடன் கூடிய சந்திப்பாக இது இடம்பெறும்.