சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, வரும் ஜூன் 9ஆம் நாள் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவருடன் கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலரும் ஜப்பான் செல்லவுள்ளனர்.
ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்கள் சிலரின் அழைப்பின் பேரிலேயே, மகிந்த ராஜபக்ச அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோரும், ஜப்பான் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மகிந்த ராஜபக்ச மேற்கொள்ளும் மூன்றாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். ஏற்கனவே அவர் தாய்லாந்து மற்றும் உகண்டாவுக்கான பயணங்களை மேற்கொண்டிருந்தார்.